Monday, 30 May 2016

ஜப்பானில் கரடிக் காட்டில் விடப்பட்ட சிறுவனைக் காணவில்லை

கார்கள் மீது கற்கள் வீசிய குற்றத்துக்காக தனது மகனுக்குத் தண்டனை வழங்கும் நோக்கில்  அவனை அவனது பெற்றோர் கரடிக் காட்டில் விட்ட சம்பவம் ஒன்று சனிக் கிழமை ஜப்பானில் இடம்பெற்றது.ஆனால்,அந்தச் சிறுவனை விட்டு ஐந்து நிமிடங்களுக்குள் சிறுவன் காணாமல் போயுள்ளான்.

ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலேயே இந்தச் சிறுவன் இவ்வாறு விடப்பட்டான்.சிறுவனை அவ்வாறு விட்டு 500 மீற்றர் சென்று ஐந்து நிமிடத்துக்குள் திரும்பி வந்து பார்க்கும்போது சிறுவனைக் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

150 பேரைக் கொண்ட பெரும் அணியொன்று சிறுவனை அந்தக் காட்டுக்குள் சனிக் கிழமை முதல் தேடி வருகின்றது.




























No comments:

Post a Comment