Wednesday, 25 May 2016

வருமான வரி அதிகாரிகளால் கூகுள் நிறுவனம் சோதனை

பிரான்சில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தை இன்று வருமான வரி அதிகாரிகள் சோதனையிட்டனர்.சுமார் 100 அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை நவடிக்கைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கியதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.வரி மோசடி விசாரணையின் ஓர் அங்கமாகவே  இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனம் செலுத்தப்படாத வாரியாக 180 கோடி அமெரிக்க  டொலரைச் சம்பாதிக்கின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில்தான் இந்தச் சோதனை இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment