Monday, 30 May 2016

குழந்தையைக் காப்பாற்ற முயன்ற மனிதக் குரங்கு சுட்டுக் கொலை

அமெரிக்காவின் சின்சினாட்டி மிருகக் காட்சிசாலையில் நேற்று மனிதக் குரங்கொன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.மிருகக் காட்சிசாலை ஊழியர்களின் பிழையான புரிந்துணர்வு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று சொல்லப்படுகின்றது.

குறிப்பிட்ட மனிதக் குரங்கு அடைக்கப்பட்டிருக்கும் வேலிக்குள் நான்கு வயதுக் குழந்தை ஒன்று தவறி வீழ்ந்தது.அந்தக் குரங்கு ஓடிச்சென்று அந்தக் குழந்தையைத் தூக்கியது.அந்தக் குழந்தையைக் கொல்வதற்காகவே தூக்குகின்றது என்று நினைத்து ஊழியர்கள் அதைச் சுட்டுக் கொன்றனர்.

ஆனால்,அந்தக் குரங்கு குழந்தையைக் கொல்வதற்கு முயற்சிக்கவில்லை.தண்ணீருக்குள் வீழ்ந்த குழந்தைத் தூக்கி அது காப்பாற்றியது.அது தெரியாமல் அதைச் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று அந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.கொல்லப்பட்ட குரங்கின் வயது 17 ஆகும்.



No comments:

Post a Comment