Saturday, 21 May 2016

மேலும் பல சிதைவுகள் கண்டுபிடிப்பு

66 பேருடன் வியாழக் கிழமை காணாமல் போன எகிப்த் எயார் விமானத்தினுடையது என்று நம்பப்படும் மேலும் பல சிதைவுகள், பயணிகளின் உடற் பாகங்கள் மற்றும் பயணப் பொதிகள் போன்றவை அலக்சான்ரியாவின் வடக்குக் கடலில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று எகிப்த் எயார் நிறுவனத்தின்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் மாயமான அன்றைய தினமும் மத்தியதரைக் கடலில் இவ்வாறு சிதைவுகள் மிதக்கின்றன என்று பாதுகாப்புத் தரப்பினர் கூறினார்.

பயங்கரவாதிகளினால் அந்த விமானம் தாக்கி அழிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால் அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment