Thursday, 19 May 2016

மனிதக் காதை உண்டவருக்கு 6 வருட சிறை

பிரிட்டனில் மனிதக் காதை உண்டவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆறு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.மனித மாமிசம் உண்பதில் நாட்டமுள்ள 24 வயது இளைஞன் வீதியால் சென்றுகொண்டிருந்த ஒரு நபரைத் தாக்கி அவரது காதைக் கடித்து எடுத்துள்ளார்.

அதை வீட்டில் வைத்து உண்பதற்காக தனது காட்சட்டை பக்கட்டினுள் போட்டு எடுத்துச் சென்றுள்ளார்.இவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அந்த இளைஞன் மனித மாமிசத்தில் நாட்டம் கொண்டுள்ளது மாத்திரமன்றி அவர் கடந்த காலங்களில் அவரது இரத்தைதையே குடிக்கும் பழக்கமுடையவராக இருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment