Saturday, 28 May 2016

ஒபாமா ஹிரோஷிமாவுக்கு விஜயம்

ஜப்பானில் இடம்பெறும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது அமெரிக்காவால் அணுகுண்டு போட்டு அழிக்கப்பட்ட ஹிரோஷிமாவுக்கும் சென்றார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சமாதான ஞாபகார்த்த பூங்காவிற்குச் சென்று மலர் வலயம் வைத்து இரண்டாம் உலக மகா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

அமெரிக்காவால் அணு குண்டு போட்டு அழிக்கப்பட்ட அந்தத் துயரச் சம்பவத்துக்காக ஒபாமா மன்னிப்புக் கேட்காமை ஜப்பான் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாறாக,நாம் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.இது போன்ற துன்பங்கள் மீண்டும் நிகழா வண்ணம் நாம் செயற்பட வேண்டும் என்று கூறினார்.

பதவியில் இருக்கும்போது ஹிரோஷிமாவுக்கு விஜயம் செய்த முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment