ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லரின் புகைப்படத்துக்கு சலூட் அடிப்பதற்கு தனது நாயைப் பழக்கிய குற்றத்துக்காக ஸ்கொட்லாந் பொலிசார் இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
நாயை இவ்வாறு பழக்கி அது ஹிட்லரின் படத்துக்கு சலூட் அடிக்கும் வீடியோ ஒன்றை குறிப்பிட்ட நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதைத் தொடர்ந்தே பொலிசார் இவரைக் கைது செய்தனர்.
இந்த வீடியோ அநேகரைப் புண்படுத்துவதாக அமைந்ததாலேயே இவரைக் கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment