Saturday, 21 May 2016

4 பெண்கள்மீது ஒரே நேரத்தில் கத்திக் குத்து

லண்டன் சென்பேறி வாகனத் தரிப்பிடத்தில் வைத்து நான்கு பெண்களைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதோடு அவர்களைக் கொல்வதற்கு முயற்சி செய்த 60 வயது  நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவ்வாறு தாக்கப்பட்ட பெண்ணொருவர் இரத்தக் காயங்களுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு ஓடிச் சென்று தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கத்திக் குத்துக்கு இலக்கான பெண்களில் ஒருவர் உயிருக்காகப் போராடி வருகின்றார் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment