Friday, 27 May 2016

அதி கூடிய எடையுடைய குழந்தை

அதி கூடிய எடை உடைய குழந்தை ஒன்று இந்தியாவின் கர்நாடகாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில்  இன்று பிறந்துள்ளது.குழந்தையின் எடை 6.8 கிலோவாகும். சராசரியாக 4 மாதக் குழந்தையின் எடையாகும்.

இது பிறக்கும் சராசரி குழந்தையின் நிறையை விட இரண்டு மடங்காகும்.தாயும் குழந்தையும் நலமாக  உள்ளனர் என்று  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழந்தை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை 50 மில்லி லீற்றர் தாய்ப் பால் அருந்துவதால் தாய்க்கு பால் ஊட்டுவது சிரமமாக உள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment