Tuesday, 24 May 2016

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 21,600 கோடி ரூபா இழப்பு

இலங்கையில் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணாமாக 21,600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.இதற்குள் தேசமடைந்த வாகனங்கள்  மற்றும் தளபாடங்கள் போன்றவை உள்ளடக்கப்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.அத்தோடு,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு போன்ற இடங்களில் வெள்ளம் இப்போது வழிந்து வருகின்றபோதிலும்,தொடர்ந்தும் மழை பெய்யும் அபாயமே உள்ளது.தென் மேல் பருவம் திங்கள் கிழமை ஆரம்பமானதால் இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

மலையகத்தின் 48 பிரேதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே,இடம்பெற்ற மண் சரிவில் இன்னும் 108 பேர் புதையுண்ட நிலையில் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அனர்த்த பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 1000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment