இலங்கையின் வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.அவர்களுள் 40 பேர் அரநாயகவில் ஏற்பட்ட மண்சரிவால் உயிரிழந்தவர்களாவர்.
தொடரும் பேரவலத்தால் நாடு பூராகவும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மூன்றரை லட்சம் பேர் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.3500 வீடுகள் சேதமடைந்துள்ளன.ஒரு லட்சம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மாத்திரம் ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.வெள்ள நீர் வடியாததால் அங்கு நிலைமை தொடர்ந்தும் மோசமாகவே இருக்கின்றன.
No comments:
Post a Comment