Thursday, 26 May 2016

விமலைத் தேடி வந்தவரை......

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழு மஹிந்த குடும்பத்தையும் முன்னாள் அமைச்சர்மார்களையும் துருவித் துருவி விசாரித்து வருகின்றது.அதில் விமல் வீரவன்சவும் அடக்கம்.

அந்த வகையில், விமன் வீரவன்சவை விசாரிப்பதற்காக இந்த விசாரணைக் குழுவால் அழைப்பாணை ஒன்று அனுப்பப்பட்டது.அந்த அழைப்பாணையை விமலுக்கு வழங்குவதற்காக அதை எடுத்துக் கொண்டு அதிகாரி ஒருவர் நேற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.

அவர் .நாடாளுமன்றிற்குச் சென்றதை விரும்பாத விமல் இது தனது சிறப்புரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்து  சபாநாயகரிடம் முறையிட்டார்.அந்த அழைப்பாணையை விமலின் வீட்டிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ வைத்து வழங்க முடியும். இந்த இடத்தில் முடியாது எனத் தெரிவித்து சபாநாயகர் அந்த அதிகாரியை அனுப்பிவிட்டார்.

No comments:

Post a Comment