Wednesday, 1 June 2016

உயிருக்கு உத்தரவாதமில்லை

வினோதமான-மிகவும் உயிராபத்து நிறைந்த சமய நிகழ்வொன்று ஜப்பானின் மத்திய சுவா பிராந்தியத்தில் ஆறு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெற்று வருகின்றது.1200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த நிகழ்வு உயிர்களைப் பறிக்கத் தவறுவதில்லை.

பக்தர்கள் அதிக எடை கொண்ட மரக் கட்டையில்  அமர்ந்து நிலத்தின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி வந்து தண்ணீருக்குள் வீழ்வதே அந்த விழாவாகும்.10 அல்லது 15 தொன் எடை கொண்ட இந்த மரக்கட்டையால் நசிபட்டு மரணம் சம்பவிப்பது தவிர்க்கமுடியாததாகும்.

2010 ஆம் ஆண்டு இருவர் மரணித்தனர்.இந்த வருட நிகழ்வில் ஒருவர் மரணித்துள்ளார்.இருந்தும்,1200 வருடங்களாக இந்தச் சமயத் திருவிழா தொடர்ந்த வண்ணமே உள்ளது.

No comments:

Post a Comment