Monday, 23 May 2016

ஆபிரிக்காவுக்கு மனித இறைச்சியை ஏற்றுமதி செய்கிறதாம் சீனா

ஆபிரிக்காவுக்கு சீனா மனித இறைச்சியையும் அதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களையும் ஏற்றுமதி செய்வதாக ஆபிரிக்க நாடான சம்பியாவில் உள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவில் வாழும் சம்பியா நாட்டுப் பெண்ணொருவரை மேற்கோள் காட்டியே அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு,சீனாவின் இறைச்சித் தொழில்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும் இதை ஒத்துக்கொண்டுள்ளனர்.இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடவசதி இல்லாமை இதற்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியால் ஆத்திரமடைந்துள்ள சம்பியாவுக்கான சீனத் தூதுவர் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்து சீனா அரசின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இந்தச் செய்தி தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் சாம்பியா அரசு தெரிவித்துள்ளது.இந்தச் செய்தி சாம்பியாவில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.



No comments:

Post a Comment