Wednesday, 25 May 2016

தென் சீனக் கடல் விவகாரம்;பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும்

தென் சீனக் கடற்பரப்பை உரிமை கோரும் விடயத்தில் சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் பிணக்கு சமாதானமாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வியட்னாமுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  மூன்று-நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் ஒபாமா அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

 இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச சட்டம் எதுவோ அதைப் பின்பற்றியே நாம் நடப்போம் என்று கூறிய ஒபாமா,வியட்நாமின் கடல்  எல்லையைப் பாதுகாப்பதற்கு வியட்நாம் கடற்படையினருக்கு அமெரிக்கா பூரண பயிற்சிகளை வழங்கும் என்றார்.

நீண்ட கால அமெரிக்கா-வியட்நாம் பனிப் போர்  முடிவுக்கு வந்ததை அடுத்து வியட்நாம்மீது விதிக்கப்பட்டிருந்த ஆயுத ஏற்றுமதித் தடையையும் அமெரிக்கா நீக்கியுள்ளது என்றும் வியட்நாம்  அதன் எதிரியிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கு உதவும் என்றும் ஒபாமா அங்கு கூறினார்.

இதேவேளை,அமெரிக்கா வியட்நாமுடன் உறவை ஏற்படுத்தி சீனாவுக்கு எதிராக காய் நகர்த்துகின்றது என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment