Tuesday, 24 May 2016

கருப்பு ஆட்டைத் தேடும் மைத்திரி

மைத்திரி-ரணில் அரசின்  அமைச்சரவையில்பேசப்படும் விடயங்களை சிலர்  உடனுக்குடன் மஹிந்தவுக்கு தெரியப்படுத்தப்படுவதாக  ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை வழங்குவது யார் என்று தேடிப் பார்க்கும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளாராம்.

மஹிந்தவின் விசுவாசிகள் அமைச்சரவையில் இருப்பதால்  இவர்களால்தான் கைது நடவடிக்கைகளில்கூட தாமதம் ஏற்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மஹிந்த ஆட்சிக்காலத்தில் முக்கிய பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்குமாறு  கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் தொடர்பிலும் அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதனால், கடும் கோபத்தில் இருக்கும் ஜனாதிபதி அந்தக் கறுப்பு ஆடு யாரென்று தேடிக்கொண்டிருக்கின்றாராம்.

No comments:

Post a Comment