Saturday, 21 May 2016

43 கார்களை இறக்குமதி செய்த மஹிந்த

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் வரி செலுத்தாமல் 43 கார்களை இறக்குமதி செய்தார் என நிதி அமைச்சர் ரவி கருனானயாக நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஆனால்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ 458 மில்லியன் ரூபா வரி செலுத்தியே 154 மில்லியன் ரூபாவுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளார் என்று நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

அதேவேளை,600 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பிரதமர் முயற்சி செய்கிறார் என்று பரப்பப்படும்  செய்திகளில் உண்மை இல்லை என்றும் ரவி கருணாநாயக கூறுனார்.

No comments:

Post a Comment