Saturday, 28 May 2016

தீ பிடித்தது கொரிய விமானம்!

கொரிய பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பிடுத்துக் கொண்டதால் அதில் இருந்த 302 பயணிகளும் விமானப் பணியாளர் குழுவில் இருந்த 17 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.ஜப்பான் தலைநகர் டோக்யோவில் அமைந்துள்ள ஹனிதா விமான நிலையத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தீ அனைப்புப் படையினர் விரைந்து தீயை அனைத்துவிட்டனர்.அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்படுகின்ற மற்றும் அங்கு வருகின்ற அனைத்து விமானங்களும் ரத்துச் செய்யப்பட்டன.

இந்த விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்த நிலையில்தான் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.எகிபித் எயார் விமான விபத்து இடம்பெற்று ஓரிரு தினங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் இதைப்  பயணிகள் சாதாரமான ஒன்றாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் அதிகம் அச்சமடைந்தார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment