தமிழக தேர்தலால் பீர் தட்டுப்பாடு
மே 16ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே புதன்கிழமை (மே 4) முதல் 28 வரை அக்னி நட்சத்திரம் இருப்பதால் பணம் கொடுத்தாலும் பிரச்சாரத்திற்கு ஆட்கள் வர தயங்குகிறார்கள்
இதுவரை வேட்பாளர்கள், தரமில்லாத சரக்குகளையே தொண்டர்களுக்கு வாங்கிக் கொடுத்து வந்தனர்.அவர்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போதை தலைக்கு ஏறியதும் பிரச்சாரத்திற்கு வராமல் பிரியாணியை வாங்கிக்கொண்டு ஒதுங்கிக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் புது யோசனையாக டாஸ்மாக் கடைகளில் பீர்களை வாங்கிக் கொடுக்க முடிவு செய்தனர். குவாட்டருக்கு பதில் பீர் வாங்கித் தருவதால் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து கட்சியினரும் கேஸ் கேஸாக பீரை வாங்கியதால் மே 2, 3ம் தேதிகளில் திருவள்ளுர் மாவட்டதிலுள்ள 300க்கும் மேற்பட்ட கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
No comments:
Post a Comment