Monday, 23 May 2016

தன்னுடலை சிங்கங்களுக்கு விருந்தாக்க முயற்சி செய்த சிலி நாட்டு இளைஞன்

பக்தி தலைக்கேறிய ஒரு இளைஞன் தன்னை சிங்கங்களுக்கு விருந்தாக்க முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை சிலி நாட்டில் உள்ள சந்டியகோ மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்றது.

 அந்த 20 வயது இளைஞன் அவரது ஆடைகள் அனைத்தையும் களைந்து இயேசுவே என்று கூறிக் கொண்டு சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தார்.சிங்கங்கள் அவரை வேட்டையாடத் தொடங்கியது பாதுகாப்பு ஊழியர்கள் ஒடி வந்து இரண்டு சிங்கங்களை சுட்டுக் கொன்றுவிட்டு அவரைக்   காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர்.

தான் இவ்வாறு செய்து உயிரை மாய்க்கப் போவதாக அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.கூடி நின்ற பார்வையாளர்கள் அனைவரையும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


No comments:

Post a Comment