Thursday, 26 May 2016

சம்பந்தன் எழும்பவில்லையாம்

இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியபோது நாடாளுமன்றின் செங்கோலுக்கு மதிப்பளித்து சம்பந்தன் எழுந்து நிற்கவில்லை.அதை சிலர் குற்றச்சாட்டாகவும் முன்வைக்கின்றனர்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் வரும்போது ''கௌரவ சபாநாயகர்'' என்று அறிவிப்பு ஒன்று செய்யப்படும்.அந்த அறிவிப்பை அடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நிற்பர்.சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்ததும் அவர்களும் அமர்ந்துவிடுவர்.

நேற்று சபாநாயகர் பின் கதவால் வந்ததால் ''கௌரவ சபாநாயகர்''என்ற அந்த அறிவிப்பு விடுக்கப்படவில்லை.படைக்களசேவிதர் செங்கோலைக் கொண்டு வந்து அக்ராசனத்தில் வைத்தார்.அப்போது அனைவரும் எழுந்து நின்றனர்.

ஆனால்,எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் எழுந்து நிற்கவில்லை.மேற்படி அறிவிப்பு விடுக்கப்படாததால் சம்பந்தன் இது தொடர்பில் எதுவும் அறியாமல் இருந்திருக்கக்கூடும். அதுபோக,அவரதும் இங்கு கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்.

No comments:

Post a Comment