வட-கிழக்கு இங்கிலாந்தின்
ஜரோவ் நகரில் வீடு ஒன்றிற்கு அருகில் வளர்ந்துள்ள மரம் ஒன்றின் காரணமாக அயலவர்கள்
இருவர் 20 வருடங்களாக சண்டையிட்டுக் கொண்டு வாழ்கின்றனர்.ஒருவர் மரத்தை அகற்றுவதற்காகப்
போராடுகிறார்.மற்றையவர் அதைப் பாதுகாப்பதற்காகப் போராடுகிறார்.
கெத்லீன் கென் [வயது-69] என்ற பெண்ணே அந்த மரத்தை அகற்றுவதற்காகப்
போராடுகிறார்.அவரது வீட்டிற்கு அருகில்-வீதி ஓரத்தில் அமைந்துள்ள அந்த மரத்தால் அவருக்குக் கடும் அசௌகரீகம் ஏற்படுகிறதாம்.
மரக்கிளைகள் அவரது படுக்கை அரைக் கண்ணாடிகளைத் தொட்டுக் கொண்டு
நிற்பதால் இரவில் அவர் திடீர் திடீரென அச்சம்கொல்கிறாராம்.அதுபோக,பார்வையற்ற அவரது
சகோதரர் வீதியால் நடந்து செல்லும்போது அந்த மரம் அவருக்கு இடையூறாகவும் இருக்கின்றதாம்.
மரத்துக்கு எதிரானவர் |
மரத்துக்கு ஆதரவானவர் |
பிரச்சினைக்குரிய மரம் |
No comments:
Post a Comment