Sunday, 5 June 2016

லண்டன் தம்பதிகள் மீது தாக்குதல்; தாய்லாந்த் பிரஜைகளுக்கு சிறைத் தண்டனை

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த லண்டன் தம்பதிகள் மீது மது போதையில் வந்து தாக்குதல் நடத்திய தாய்லாந்த் பிரஜைகள் நால்வருக்கு தாய்லாந்த் நீதிமன்றம் நேற்று  சிறைத் தண்டனை வழங்கியது.

தலா ஒவ்வொருவருக்கும் நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்களின் தண்டனை இரண்டு வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் இரவு 13 ஆம் திகதியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.இதன்போது லண்டன் பிரஜைகளான ரோஸ்மேரி மற்றும் லெவிஸ் ஒவென் என்ற தம்பதியினரும் அவர்களது மகனுமே இவ்வாறு தாக்கப்பட்டனர்.CCTV வீடியோ காட்சியை வைத்து குற்றவாளிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.




No comments:

Post a Comment