Saturday, 4 June 2016

இறந்த புலிகள் பௌத்த விகாரையில் மீட்பு

தாய்லாந்தின் சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் இருந்து இறந்த நிலையில் 40 புலிக்குட்டிகள் வனலாகா அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.இதற்கு முன்பு உயிருடனும் 40 புலிகள் மீட்கப்பட்டிருந்தன.

அந்த விகாரையின் குளிரூட்டியில் இருந்தே இறந்த புலிக் குட்டிகள் மீட்கப்பட்டன.கறுப்புச் சந்தையில் விற்பதற்காகவே இவ்வாறு வைக்கப்படிருந்தன என்று வனலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விகாரை சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.சமய செயற்பாடுகளுக்குப் பதிலாக மிருகக் காட்சிசாலைபோன்று செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுடன் அங்கிருந்த புலிகள் 40 மீட்கப்பட்டன.தொடர்ந்து மேற்கொண்ட சோதனையின்போது  உயிரிழந்த புலிக் குட்டிகள் மீட்கப்பட்டன.

No comments:

Post a Comment