சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாம் நிலைத் தலைவராவதற்கான
அனைத்துத் தகுதிகளும் தனக்கு இருப்பதாக முன்னாள்
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவராகக்
கொண்டு வருவதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று வெளியாகி இருந்த செய்திகள் தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டின் இறைமை,தேசியம்,பாதுகாப்பு மற்றும் இராணுவம் ஆகியவை
மீது தனக்கு அதிக அக்கறை உண்டு என்று கூறிய கோட்டாபே நாட்டைப் பாதுகாப்பதற்காக களத்தில்
இறங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.இதன்
மூலம் அவர் அரசியலில் குதிப்பதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
.
No comments:
Post a Comment