Monday, 6 June 2016

லண்டன்-மலேசிய விமானத்தில் கைகலப்பு

லண்டனில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற மலேசியா பயணிகள் விமானத்தில் ஞாயிற்று கிழமை  விமானப் பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

வங்காள விரிகுடாவிற்கு மேலால் சென்றுகொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.கைகலப்பு ஒருவாறு கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரப்பட்டு மலேசிய விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரை இறக்கப்பட்டது.

காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியர்கள் குழுவொன்று விமான நிலையத்தில் காத்துக் கிடந்தது.விமானம் தரையிறங்கியதும் காயமடைந்த அத்தனை பேருக்கும் சிகிச்சைளிக்கப்பட்டது.






No comments:

Post a Comment