Wednesday, 8 June 2016

சுறா மீன் தாக்குதலால் மூதாட்டி பலி

பிரிட்டனைச் சேர்ந்த டொரீன் கொல்யர் என்ற 60 வயது மூதாட்டி ஒருவர் ஆஸ்திரேலிய கடலில் சூரா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பே அவரது கணவருடன் ஆஸ்திரேலிய சென்றுள்ளார்.

இவர் நீந்துவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.சம்பவ தினத்தன்று இவரும் இவரது நண்பியும் நீந்திக் கொண்டிருந்தேபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அவரது நண்பி டொரீனைக் காப்பாற்ற முயன்றபோதும் அவர் உயிரிழந்துவிட்டார்.

இது சுறா மீனின் தாக்குதலால் ஏற்பட்ட மரணம்தானா என்று ஆஸ்திரேலிய பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment