பிரிட்டனில் இந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை 75 லட்சம் பிரித்தானியர்கள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொத்த வாக்காளர்களுள் 86 வீதமானவர்களே பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதனால் 75 லட்சம் பேர் வாக்களிக்கமுடியாமல் போகும் என்றும் தேர்தல் அணைக்குழு நேற்றுத் தெரிவித்தது.
கடந்த மாதம் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களைப் பதிவு கொண்டனர்.திங்கள் கிழமை பதிவு செய்யப்பட்ட 2 லட்சத்து 26 பேரும் இதற்குள் அடங்குகின்றனர் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment