ஜேர்மன்
குடியேற்றவாசிகள் இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களுக்குள் 69 ஆயிரம் குற்றச் செயல்களில்
ஈடுபட்டுள்ளனர் அல்லது அவற்றுக்காக முயற்சி செய்துள்ளனர் என்று ஜேர்மனிய பொலிசார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
வட
ஆபிரிக்கா,ஜோர்ஜியா மற்றும் செபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகளே அதிகமான
குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சிரியா,ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற
நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தளவிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும்
பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள்
6.6 வீதமானவை போதைப் பொருள் சார்ந்த குற்றச் செயல்களாகவும் 1.1 வீதம் பாலியல் குற்றச்
செயல்களாகவும் உள்ளன என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment