Saturday, 4 June 2016

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கொலை மற்றும் தற்கொலை

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்  நேற்று புதன் கிழமை ஒரு கொலையும் தற்கொலையும் இடம்பெற்றது.பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட அலுவலகத்துக்குள்ளேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதற்கான காரணங்கள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 43,000 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் நேற்று இடைநிறுத்தப்பட்டன.இன்று கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment