Wednesday, 1 June 2016

விகாரையில் இருந்து புலிகள் மீட்பு

தாய்லாந்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் இருந்து பல புலிகளை வனலாகா  அதிகாரிகள் மீட்டுள்ளனனர்.அந்த நாட்டுக்குச் சொந்தமான புலிகளை கொண்டு அந்த விகாரை ஒரு சரணாலயம்போல்  செயற்பட்டு வந்தது.இவற்றைக் கொண்டு அங்கு வரும் சுற்றுலாவாசிகள் கவரப்பட்டனர்.

இது சட்டவிரோதமான செயல் என்பதால் அந்தப் புலிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.விகாரையின் நிர்வாகிகளும் சில மக்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நீதிமன்ற உத்தரவைப் பெற்று வனலாகா அதிகாரிகள் இந்தப் புலிகளை மீட்டனர்.இந்தப் புலிகள் அரசின் சரணாலயங்களில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment