Monday, 6 June 2016

மனைவி சுட்டுக் கொலை;பிரிட்டன் வர்த்தகர் கைது

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள தனது ஆடம்பர வீட்டில் வைத்து தனது மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரிட்டனைச் சேர்ந்த அவரது கணவனான ரிச்சார்ட் அல்தென் [ வயது 53] என்ற வர்த்தகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை அவரது மனைவி துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்துக் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது ஒரு தற்கொலை என அவரது கணவர் கூறியபோதிலும்,பொலிசார் அது தொடர்பில் சந்தேகம்கொள்ளத் தொடங்கினர்.அவர் பின்னால் சுடப்பட்டிருப்பதும் முதுகில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதுமே  இதற்குக் காரணம்.இதனால் பொலிசார் கணவனைக் கைது செய்துள்ளனர்.அவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


No comments:

Post a Comment