Saturday, 4 June 2016

மூன்று குழந்தைகளைக் கொன்ற தாய்

அமெரிக்காவின் பீனிக்ஸ் பகுதியில் தாய் ஒருவர் அவரது மூன்று குழந்தைகளைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலையில் வீட்டுக்கு வந்த அந்தப் பெண்ணின் சகோதரன் குழியல் அறை நீண்ட நேரம் மூடிக் கிடப்பதை அவதானித்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அந்தப் பெண் வெட்டுக் காயங்களுடன் தற்கொலைக்கு முயற்சித்து கிடந்ததைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.

குழந்தைகளைத் தேடியபோது  மூவரும் கொல்லப்பட்டு இருவரின் உடல்கள் அலுமாரிக்குள்ளும் இரண்டு மாதக் குழந்தையின் உடல் பயணப்  ஒன்றுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்..பொலிசார் விசாரணைகளை .மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment