புது மணப் பெண்களாக அல்லது புது மாப்பிள்ளைகளாக வருடம் தோறும் 30,000 பேர் பிரிட்டனுக்குள் பின் வழியாக நுழைகின்றனர் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட ஏற்பாடுகளே இதற்குக் காரணம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் மாத்திரமே இந்தக் குடிவரைவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியே உள்ளவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய வேண்டுமென்றால் பிரிட்டனில் உள்ள குடிவரவு சட்டத்தின்படி,தொழிலுக்கான வீசாவை அல்லது குடும்பமாகக் குடியேறுவதற்கான விசாவைப் பெற வேண்டும்.
ஆனால்,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளை உறவினர்களாகக் கொண்டவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.இவர்கள் மூன்றாம் தரப்பு நாடுகளின் பிரஜைகள் என அறியப்படுவதோடு டேவிட் கேமேரோன் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டது முதல் இவ்வாறான 140,921 பேர் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment