அமெரிக்க மிருகக் காட்சிசாலையில் மனிதக் குரங்கொன்று சுட்டுக்
கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.அந்தச் சம்பவத்துடன்
தொடர்புபட்ட சிறுவனின் பெற்றோரிடமே பொலிசார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற சனிக் கிழமை சிறுவன் ஒருவன் பெற்றோருடன் விளையாடிக்கொண்டிருந்தபோது
தவறி நீர்த் தொட்டிக்குள் வீழ்ந்தான்.அந்தச் சிறுவனை மிருகக்காட்சிசாலையில் இருந்த
17 வயது நிரம்பிய மனிதக் குரங்கொன்று காப்பாற்ற முயன்றது.ஆனால்,அது சிறுவனைக் கொல்லப்
போகின்றது என நினைத்து மிருகக்காட்சிசாலை நிர்வாகிகள் அந்தக் குரங்கை சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.கொல்லப்பட்ட
குரங்கிற்கு மக்களின் அனுதாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
No comments:
Post a Comment